தற்போதைய வேலை
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
 சிறப்பு களங்கள்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்
 என்னை பற்றி
சமகாலத் தமிழ்ப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் பற்றித் தீவிரமான கட்டுரைகளை எழுதுவது. எனது கட்டுரைகள், தொண்ணூறுகளுக்குப் பின் வந்த இடைநிலைப் பத்திரிகைகள் பெரும்பாலானவற்றில் வெளிவந்துள்ளன. பின்னர் நூல்களாகத் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குப் படிக்கக் கிடைக்கின்றன.
 புனைபெயர்
தீர்க்கவாசகன் (கவிதைகள் எழுதிய காலத்தில்)
 பிறந்த ஊர்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கும் தச்சபட்டி என்னும் மலையடிவாரக் கிராமம்.
 படிப்பு
  • மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
  • மதுரை, அமெரிக்கன் கல்லூரி.
  • திண்டுக்கல் டட்லி உயர்நிலைப்பள்ளி.
 பணியிடங்கள்
  • தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்(1997- )
  • சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளி, புதுவைப்பல்கலைக்கழகம் (1989-97)
  • மதுரை, அமெரிக்கன் கல்லூரி, (1987-1989)
 நூல்கள் : தனியாசிரியர்
  • 2014 -தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும்(திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளின் தொகுதி) உயிர்மை பதிப்பகம், சென்னை. [ISBN-978-93-81975-97-8 ]
  • 2009- இலக்கியமும் வரலாறும் –நாயக்கர்காலம் ( முனைவர் பட்ட ஆய்வின் திருத்திய வடிவம்) உயிர்மை, சென்னை
  • 2009 – வேறு வேறு உலகங்கள் (சமகால நிகழ்வுகள் குறித்து உயிரோசை இணைய இதழில் எழுதிய 22 கட்டுரைகளின் தொகுதி), உயிர்மை, சென்னை
  • 2009 – திசைகளும் வெளிகளும் (சமகால நிகழ்வுகள் குறித்து தினமலர் – செய்திமலரில் எழுதிய 75 கட்டுரைகளின் தொகுதி), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
  • 2008 – மையம் கலைத்த விளிம்புகள் (தலித்தியம், தலித்திலிக்கியம் பற்றிய விமரிசனக் கட்டுரைகள்), ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை
  • 2007 – முன்மேடை, (அரங்கியல் மற்றும் நாடகங்கள் குறித்த கட்டுரைகள்) அம்ருதா பதிப்பகம், சென்னை
  • 2007 – தமிழ் சினிமா – அகவெளியும் புறவெளியும் (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
  • 2007 – நகரும் காட்சிகள்: ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியல், (பிம்ப உருவாக்கம் குறித்த ஆய்வு நூல்) பாரதி புத்தகாலயம், சென்னை
  • 2005 – பிம்பங்கள் அடையாளங்கள் (வெகுமக்கள் பண்பாடு குறித்த கட்டுரைகள்), உயிர்மை, சென்னை
  • 2004 – ஒளிநிழல் உலகம், தமிழ் சினிமா கட்டுரைகள், (விமரிசனக் கட்டுரைகள்) காலச்சுவடு, நாகர்கோவில்
  • 2002 – அலையும் விழித்திரை, (வெகுமக்கள் பண்பாடு, ஊடகங்கள் குறித்த கட்டுரைகள்), காவ்யா, பெங்களூர்
  • 2002 – வட்டங்களும் சிலுவைகளும், (10 குறுநாடகங்கள்), வானவில், பாளையங்கோட்டை
  • 2001 – சங்கரதாஸ் சுவாமிகள், (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) சாகித்திய அகாடமி, புதுதில்லி
  • 1998 – ஒத்திகை, (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய கட்டுரைகளும்), விடியல்,
  • 1995 – நாடகங்கள் விவாதங்கள், (நாடகங்களும் நாடகங்கள் பற்றிய விவாதமும்) ஒப்பனை, பாண்டிச்சேரி.
 நூல்கள் :தொகுப்பாசிரியர்
  • 2009 – தேற்றமும் தெளிவும் – பதிப்புத்துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
  • 2007 – நள்ளிரவு வெக்கை, அம்பேத்கரியல் மையம் வெளியீடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி
  • 2002 – திறனாய்வுத் தேடல்கள் – கட்டுரைகள்.(இணை ஆசிரியர்கள் – ந. முருகேசபாண்டியன், பா. ஆனந்தகுமார்) பாரதி புத்தக நிலையம், மதுரை
  • 1998 – பின்னை நவீனத்துவம் – கோட்பாடுகளும் தமிழ்ச் சூழலும் (இணை ஆசிரியர் – தி.சு. நடராசன்) விடியல், கோவை
  • 1992 – கனவைத் தொலைத்தவர்கள் – ஐந்து இளைஞர்களின் கவிதைகள்.
 என்னை தொடர்பு கொள்ள →

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters