: 38

மனம்

எனக்குத் தெரிந்து

இந்த வீட்டின்  கதவுகள்

அடைத்துக் கொண்டதேயில்லை.

 

பூர்ணமை நாட்களில்

முழுநிலாவும்

மெல்லடி பதித்து

ஓடி விளையாடும்

அமாவாசை தினங்களில்

கும்மிருட்டும் கட்டிப்பிடித்துச்

சந்தித்துக் கொள்ளும்.

 

அந்தச் சந்தேகம்

வலுத்துக் கொண்டே வந்தது.

எதையாவது

மறைத்து வைப்பதென்றால்

என்ன செய்வது?

அயலானிடம் ஓசி கேட்பதா?

வாடகை கொடுப்பதா?

குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

 

சாமர்த்தியமிருந்தால்

குடியேறிக் கொள்ளலாம்.

தூசிபடிந்த அதன் தரையில்

பல காலடிச்சுவடுகள்

படிந்திருக்கக் கூடும்.

நீயும் பதிக்க விரும்பினால்

பதித்துக் கொள்ளலாம்.

படுக்க விரும்பினால்

உள்தாழ்ப்பாளோடு உள்ளே போ.

குடியேறியவுடன் மூடிக் கொள்>

 

வெளியே போக விருப்பம் கொள்ளாதே

இன்னொன்று

குடியிருப்பு இல்லாமல் காத்திருக்கக் கூடும்

 

எல்லாம் உன் சமர்த்து.

வீட்டு விலாசம் இதோ இருக்கிறது.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை