: 46

மூன்று பொம்மைகள்

நீங்கள்

ஒதுங்கிக் கொள்ள முடியாது;

உங்களுக்கும்

இதில் பாத்தியதை உண்டு

 

ஆடையில்லாத சினிமா;

அட்டையிலேயே

அவிழ்த்துப்போடும் பத்திரிகை.

விபச்சாரம்புரியும்

எழுத்துக்கூலிகள்.

 

இனங்காட்டாத பாடமுறை

பணம் தேடும் ஆசிரியர்கள்

அழுக்குப் படிந்த கல்வி நிலையம்.

முகத்துக்கு முன் பல்லிளிப்பு

முதுகுக்குப் பின் கையூட்டு

வாய்ச்சவடால் மேடைப்பேச்சு.

ஏமாற்றுவதற்கான முன்னேற்றத் திட்டங்கள்.

 

இந்த வகையான தீயவைகளைப் பாருங்கள்.

இப்படிப்பட்ட தீயவைகளைக் கேளுங்கள்.

இந்தத் தீயவைகளைப் பற்றிப் பேசுங்கள்.

 

இல்லையென்றால்

நீங்களும் தப்பித்துக் கொள்ள முடியாது.

உங்களுக்கும்

இதில் பாத்தியதை உண்டு.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை