: 34

அணையா நெருப்பு

மௌனமும் சப்தம் போட்டு

சவ்வுகள் கிழிந்து போகும்.

இருட்டினில் சுவர் தடவி

ஆணியும் அடிக்க வேண்டும்.

இருந்தவொரு துளையைத் தேடி

ஆணியும் கையுமாக,

சுவரெங்கும் மேடுபள்ளம்.

மெதுவாகக் கீழிறங்கித்

தேடலின் பயணம் நீளும்.

இருந்தவொரு துளை மறந்து

எங்கெங்கோ மோதிப் பார்க்கும்.

தேடிய துளை உரச

ஆவலும் பாய்ந்திறங்கும்

அப்புறம் களைப்பு தீர்ந்தால்

ஆணியில் கை இருக்கும்

விரல்கூட  வீங்கினாலும்

சுகம் நெஞ்சில் அசைந்திருக்கும்.

ஆனாலும் ஆணிதன்னை

அடிப்பது கஷ்டம்; உண்மை

 

2-2-1981


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை