: 52

அழியும் எழுத்துகள்

சொல்லத்தொடங்கினால்

விடுபடும் பெயர்கள் குறித்தே

அக்கறை.

தாள்கள் உள்ளன.

பேனாக்கள் உள்ளன.

குறித்து வைத்துக் கொள்ள

நினைவுகள் தான்...

 

விசிறியடித்தபின்

வரிசை காட்டினால்

பல்லிளிப்பே மிஞ்சும்.

எழுதத் தொடங்கியபோது

இல்லாமல் போன நீ

கசக்கி எறிந்தபின்

கனவாகலாம்.

 

யாருக்கு இல்லையென்றாலும்

அவனுக்கு உண்டு.

அழிரப்பர் கொண்டு

அழிக்க நினைத்துக்

கறையெனச் சொல்லி

காணாமல் போனவன்.

 

நன்றி..நன்றி...

நன்றி... நன்றி....

    ==============19-11-2003


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை