: 24

வில்வளைப்பு


1200/- ரூபாய் வாடகை வீட்டு

மொட்டை மாடியில் அவள்,

தவணை முறையில் பாக்கி நிற்கும்

ஸ்கூட்டருடன் அவன்.

அவளும் நோக்க அண்ணலும் நோக்க

இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தி...

 

பத்தாயிரத்திச் சொச்சம் சம்பளம் வாங்கியும்

அவள் தகப்பன் வரதட்சணை வில்லை

இன்னும் வளைக்கவேயில்லை.

அப்புறம் தானே

ராமன் வீட்டிற்கு வருவதும்

அம்பை எடுப்பதும், வில்லை வளைப்பதும்

அல்லது முறிப்பதும்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை