: 47

வருவதும் போவதும்

அந்தரங்கக் காதலியின் துர்மரணம் 

ஒன்பது; அழகின் விரோதம்.

எப்பொழுதும் பட்டியல்

எட்டைத் தாண்டாது.

கடைசி நான்கும் தற்காலிக இடங்கள்.

முதல் மூன்றும் நிரந்தர இடங்கள்.

நான்கு மட்டும் இரண்டுக்கும் இடையில்.

ஏக்கத்தைச் சொல்லி

இயலாமையில் போனவளும்,

முதல் ஸ்பரிஷம் பெற்று

முதல் கலவி தந்தவளும்

விதிகள், விளையாட்டுக்கள், வினைகள்

என விவாதங்கள் புரிந்தவளும்

செத்துப்போவது நிச்சயம் இல்லை.

தோற்பதற்கெனவே களமிறங்கும்

வீராங்கனையும்,

சூட்டியபோது வாய்பிளந்த

அழகுராணியும்

தற்கொலையில் செத்துப்போன

திரை நட்சத்திரமும்,

அட்டைப் படத்தில் இடம்பிடிக்கும்

ஆதிவாசிப் பெண்ணும்,

வருவார்கள்;போவார்கள்.

ஆனால் இவள் மட்டும் போவாள்; வருவாள்...

வருவாள்; போவாள்....

புதுமை நழுவிய மரபின் முழுமை.

நளின வகிடு; வட்டப் பொட்டு.

அதிராப்பேச்சு; அதிரும் உதடுகள்.

தொலைக்காட்சிப் பெட்டிகளின்

அதிகார தேவதை.

வெண்துகில் போர்த்தி

கூந்தல் களைய

 விரும்பி யுரைத்தாள்.

       நான்காமிடமும் காலியாச்சு..

       இல்லை.. இல்லை.. செத்துப் போச்சு. 

                ====================== 28-05-2004


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை