: 23

பொதுவும் சிறப்புமாக நகரும் பிம்பங்கள் : சில தமிழ் ஆவணப்படங்களை முன்வைத்து.

பொதுவும் சிறப்புமாக நகரும் பிம்பங்கள் : சில தமிழ் ஆவணப்படங்களை முன்வைத்து.


தமிழ் வெளியைப் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படங்களைச் சென்னையில்மூன்று இடங்களில்ஒருவாரத்திற்குத்  (மார்ச் 13-19)திரையிட்டார் அமுதன்அமுதனின் அழைப்பை ஏற்றுக் கடைசி நாள் பெரியார் திடலிற்குத் தான் போகமுடிந்தது.
கடைசிநாளில் கடைசியாகத் திரையிடப்படும் படம் கக்கூஸ் என்று அறிவுப்பும்இருந்ததுபடம் ஓடக்கூடிய நேரம் 105 நிமிடங்கள்நான் பயணிக்கவேண்டியநெல்லைவிரைவுரயில் கிளம்பும் நேரம். 20.10. அந்தப் படத்தைப் பார்க்கமுடியாமல்கிளம்ப வேண்டிய சூழல்சொர்ணவேலின் ‘தங்கம்’, டாடா குழுமத்திற்காகத்தயாரிக்கப்பட்ட பெண்கவிகளைப் பற்றிய  ‘அவள் எழுதுகிறாள்’ சோமிதரனின்முள்ளிவாய்க்கால் சாஹா’, வெங்கடேஷ் சக்ரவர்த்தியின்  ‘பிளவுண்ட நகரம்:சென்னை’ ஆகியன முடியும்போது நேரம் 19.30. 
திவ்யா பாரதியின் கக்கூஸ்,19.30 -க்கு ஆரம்பித்தாலும் முடியும்போது 21.15 ஆகிவிடும்பயணத்தைத் தள்ளிப்போடமுடியாதுஅன்று கிளம்பிவிட்டேன்ஆனால் எண்ணிப் பத்தே நாளில் அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பைஏற்படுத்திக் கொடுத்தது இடதுசாரிக் கம்யூனிஸ்ட் கட்சிஅக்கட்சியின் திருநெல்வேலி அலுவலகத்தில் 29.03.2017அன்று கக்கூஸ் படத்தைப் பார்த்தேன்.  இந்தப் படங்கள் உருவாக்கியுள்ள மனநிலை எனது பழைய நிலைபாட்டில்மாற்றத்தைக் கோருகின்றன.
வாரத்திற்கு இரண்டுக்கும் மேற்பட்ட புனைவுப் படங்களைப் பள்ளிப்படிப்புக்காலம் தொடங்கிப் பார்த்துவருகிறேன்.பார்த்து முடித்தபின் குப்பையானதொரு சினிமாவைப் பொறுமையாகப் பார்த்துமுடித்துவிட்டோமே என்றுபாராட்டிக்கொள்ளும் மனம்இப்போதும் ஆவணப் படங்களைப் பார்க்கும்போது அப்படியொரு பாராட்டைத்தனக்குத்தானே வழங்கிக் கொள்வதில்லைஅதற்கான காரணங்கள் இவைதான் என்றும் சொல்லமுடியவில்லை.பள்ளிக்காலப் பழக்கம் அல்லது கொண்டாட்டம்  புனைவுப்படங்கள் என்றால் ஆய்வுப் பட்டக்காலத் தேடலேஆவணப்படங்கள்ஆவணப்படங்களைப் பார்க்கச் செல்லும்போது ஒரு தளர்வான மனநிலை உருவாவதுஅண்மைக்கால மனநிலை என்று சொல்லமுடியாது.  தொடக்கக் காலங்களில் அப்படியொரு தளர்வு மனநிலைஇருந்ததில்லைபாண்டிச்சேரியில் இருந்த காலங்களில் நடந்த ஆவணப்பட விழாக்கள்திரையிடல்கள் வழியாகஉருவான தளர்வு மனநிலைஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தைக்கூட விலக்கிவிட்டனபுனைவுப் படங்களைப்   பார்க்கத் தொடங்கிப் பல ஆண்டுகளுக்குப் பின்பே ஆவணப்படங்கள் பார்க்கும் வாய்ப்புகள்உருவானதுஇப்படித்தான் இருக்கும் என்ற முன் அனுமானமின்றைப் புனைவுப்படங்களைப் பார்க்கப்போவதுபோலஆவணப்படங்களைப் பார்க்கப் போகமுடியாது என்பது ஒருபெருந்தடையாகவே இருக்கிறது.
எப்போதும்போல இந்தத் திரையிடல்கள் நிகழ்வையும் முன்னரே எனக்குத் தெரிவிக்கவே செய்தார்எனக்குக்கடைசிநாள்தான் போக முடிந்த்துஇந்தத் திரையிடல்களில்  காண்பிக்கப்பட்ட 19 படங்களில் பாதிக்கும் மேல் முன்பேபார்த்தவைகளேஎன்றாலும் ஒரே நேரத்தில் பார்த்தால்  அவற்றை முன்வைத்து ஆவணப்படங்கள் உருவாக்கும்தளர்வுமனநிலை குறித்து விரிவாகப் பேசியிருக்க முடியும்நெல்லை மாதிரியான கிராமந்தர நகரத்தில் வசிக்கும்என்னைப் போன்ற மனிதர்களுக்கு அந்த வாய்ப்புகள் குறைவுதான்சென்னைவாசிகளுக்கும்கூட அது சாத்தியம்என்று சொல்லமுடியாதுஆனால் அமுதன் சென்னைவாசிகளுக்குத் தொடர்ந்து அத்தகைய வாய்ப்புகளைஉருவாக்கத்தந்துகொண்டே இருக்கிறார்அதுவும் இலவசமாகவே உருவாக்குகிறார் என்பதுதான் ஆச்சரியம்.  
தமிழ்வெளியைக் களமாகக் கொண்ட இந்த ஆவணப்படங்களில் சோமிதரன்வெங்கடேஷ் சக்ரவர்த்திதிவ்யா பாரதிஆகியோரின் மூன்று படங்களை முக்கியமான படங்களாகச் சொல்லவேண்டும்அவை கவனப்படுத்தியுள்ளநிகழ்வுகளுக்காக அல்லாமல் அவை சொல்லப்பட்ட முறை அல்லது கிளத்துதல் காரணமாகவும் அடுக்கப்பட்டுமுன்வைக்கப்பட்டுள்ளதற்காகவும் முக்கியத்துவம் பெறுகின்றனசினிமாக்கள் அவை புனைவாக இருந்தாலும்ஆவணப்படமாக இருந்தாலும் அடிப்படைகள் ஒன்றுதான்பிம்பங்களாலும்(Images), நகர்வுகளின்வழிகாட்சிப்படுத்தப்படும் உத்தியாலும்(Movements of Camera) ,  அவற்றை வெட்டியடுக்கப்படும்(Editing and Montage)நிலைபாட்டாலும் முன்வைக்கும் சொல்முறையாலும்(Narratology) கவனிக்கப்பட வேண்டிய கலைவடிவம்இதனைஉணர்ந்தவர்களாக இம்மூன்று இயக்குநரும் வெளிப்பட்டுள்ளனர் என்பதாலேயே கவனிக்கத்தக்க படங்கள்எனச்சொல்லத் தோன்றுகிறது.
சக்ரவர்த்தியின் சென்னை
வளர்ச்சியடையும் சென்னை மாநகரம் ஒவ்வொரு திசையிலும் சம அளவில் விரியாமல் தெற்கிலும் மேற்கிலும் தொழில் கூடங்களால் வீங்கிப் பெருத்துக்கொண்டிருக்கிறது எனக் காட்டுகிறது. தென்சென்னையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக விரிகின்றன. அம்பத்தூர்ஆவடி போன்ற பகுதிகளில் பழைய தொழிற்பேட்டைகளோடு,செங்கல்பட்டுஸ்ரீபெரும்புதூர்ச் சாலைகளில் தொடங்கப்படும் கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சியால் பலனடையப்போகும் மனிதர்கள் சென்னையின் மனிதர்கள்தானாஎன்ற கேள்வியையும் எழுப்புகிறது. அத்தோடு மாநகரத்தின் குப்பைகளைக் கொட்டுமிடமாக ஆக்கப்பட்ட வடசென்னைவிரிவாக்கத்தை/வளர்ச்சியை அடையாமல் தடுக்கப்பட்ட அரசியலையும் பேசுகிறது. மொத்தத்தில் பிளவு என்பதைப் பொருளாதார அடிப்படையில் பார்த்துள்ள இந்த ஆவணப்படம் சென்னை நகர மக்கள் மதம் சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்தும் கொண்டாட்டங்களையும் அவற்றிற்கான நாட்களையும் விடாப்பிடியாகத் தக்கவைக்கப் போராடுவதையும் காட்டுகின்றது. இது ஒருவிதத்தில் வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் சென்னை. அரைநூற்றாண்டுக்காலச் சென்னை வாழ்க்கையால் அந்நகரின் சாலைகளிலும்பலவகையான நிகழ்வுகள் நடக்கும் வெளிகளிலும்ஓய்வெடுக்கும் பிரதேசங்களிலும் அலைந்து திரிந்த ஒருவரின் பார்வையாக அந்தப் படத்தின் காட்சித் தொகுப்புகள் இருந்தன.
நான் அவரைப்போலச் சென்னைவாசி அல்ல. சென்னைக்கு எப்போதும் விருந்தாளிதான். எனது முதல் சென்னைப்பயணம் 1982. அரசுப்பணி ஒன்றிற்கான நேர்காணலுக்காக வந்தது. அப்போது தொடங்கி ஆண்டுதோறும் வந்துபோய்க் கொண்டே இருக்கிறேன். அதிக அளவில் ஒருவாரம்வரை இரவிலும் பகலிலும் இங்கே தங்கிச் சுற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் சென்னை நகரம்தென் தமிழ்நாட்டுக் கிராமத்து மனிதர்கள் எங்களுக்கும் இந்த மாநகரில் பங்கிருக்கிறது எனச் சொல்லிக் கொண்டே இருக்கும் அடையாளங்களைப் பார்க்கிறேன். பண்பாட்டு அடையாளங்களை நிலையான காட்சிகளாகவும் அசையும் பிம்பங்களாகவும் விழாக்களாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள் . அந்தவகையிலும் சென்னை: பிளவுபட்ட நகரமாகவே இருக்கிறது. இதனைப் பிம்பங்களாக அடுக்கிப் பார்ப்பதைப் போல புதுமைப்பித்தன்ஜெயகாந்தன்ஜெயந்தன்சா.கந்தசாமி,அசோகமித்திரன்திலகவதிசுஜாதாதிலீப்குமார்தொடங்கி அண்மையில் எஸ்.ராமகிருஷ்ணன்ஜெயமோகன்,அரவிந்தன்விநாயகமுருகன்கரன் கார்க்கிலக்ஷ்மிசரவணக்குமார்சரவணன் சந்திரன் என நீளும் புனைகதைப்பரப்பிலும் தேடிப்பார்க்கலாம். அப்படியான ஆய்வு சென்னையின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும்.

சோமிதரனின் முள்ளிவாய்க்கால் 
முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளை எழுத்தாகவும் காட்சிகளாகவும் உலகம் கவனித்துக் கடந்தஒன்றுவெற்றியும் தோல்வியுமாக 30 ஆண்டுகள் நடந்த விடுதலைப்போராட்டத்தைமுடிவுக்கொண்டுவந்த வெளியின் குறியீடுவிடுதலையை விரும்பிய ஒரு கூட்டம் / இனம்குரூரமாக அந்த நாட்டு அரசாங்கத்தால் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசிக் கொல்லப்பட்டபோர்க்களம்.  இந்தப் போர்க்களக் காட்சிகளைத் தமிழ்க்கவிதமிழ்நதிதேவகாந்தன்,சயந்தன்குணா கவியழகன் போன்றவர்களின் நாவல்களிலும்ராகவன்தமிழினிபோன்றவர்களின் சிறுகதைகளிலும் வாசித்திருக்கிறேன்துயரங்களையும் வலிகளையும்நேரடியாகப் பதிவுசெய்யும் காட்சிச் சித்திரங்கள் அவைஆனால் சோமிதரனின்ஆவணப்படம் நேரடிக் காட்சிகளை ஆவணப்படுத்துதலை முதன்மை நோக்கமாகக்கொள்ளாமல்குற்றவுணர்வு கொண்ட உலகின் மனச்சாட்சியை நோக்கிக் கச்சிதமாக வாதங்களைக் காட்சிகளாக அடுக்கிக் காட்டும் படமாக எடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த ஆவணங்களை அடுக்குவதினூடே ஆதாரமான சாட்சியங்களாக இரண்டு குரல்களைத்தேடிப் பயன்படுத்தியுள்ளார். ஒன்று பெண்குரல்லண்டனில் இருந்து. . இன்னான்று ஆண்குரல்ஆஸ்திரேலியா.இருவரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப்பின்- கோரத்தை அனுபவித்துவிட்டு அரசின் வழியாகவே வெளியே வந்தவர்கள். ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்புகள்பக்கத்து நாடான இந்தியாஅரச வன்முறைக்கு உதவிய ஆயுத வியாபார நாடுகள் என அனைவரும் பதில் சொல்லவேண்டிய கேள்விகளாகக் காட்சிகள் நகர்கின்றன. பதில்களை மறைக்கும் இருள்மேகங்களிடம் என்ன பதில்கள் கிடைக்கும்?
கக்கூஸ்
திவ்யா பாரதியின் கக்கூஸ் தமிழ்நாடு என்னும் மொத்த நிலப்பரப்பிலும் குறிப்பிட்ட ஒரு தொழிலில் ஈடுபடும்மனிதக்கூட்டத்தின் மீது நடத்தப்படும் பலதள வன்முறைகளைச் சொற்களாகவும் காட்சிகளாகவும் நிகழ்வுகளாகவும்அடுக்கிக் காட்டியுள்ளதுமதுரைவிழுப்புரம்விருதுநகர்திருநெல்வேலி எனப் பலநகரங்களிலும் மலம் அள்ளும்தொழிலில் ஈடுபடும் மனிதர்களுக்குச் சட்டப்படி கிடைக்கவேண்டிய சலுகைகள்உரிமைகள் போன்றவற்றைமறுக்கும் நிலைக்குப் பின்னே இருக்கும் ஒதுக்கல்களை முன்வைக்கிறது திவ்யாபாரதி படம்இந்திய சமூகத்தின்கட்டமைப்பை உருவாக்கியுள்ள சாதியக் கருத்தியலேநிகழ்கால அரசியலையும்அரசுகளையும் அதனை இயக்கும்மனிதர்களிடமும் ஆழமாகப் படிந்து கிடக்கிறது என்பதைச் சொல்லும் குரல்கள் நேரடியாகப்பதிவுசெய்யப்பட்டுள்ளனஆனால் கேள்விகள் முழுவதும் அமைப்புகளை நோக்கியே நீள்கின்றனஇதற்குப்பதிலாகப் பார்வையாளர்களை நோக்கியும் ஆழமான கேள்விகள் நீண்டிருக்க வேண்டியனஏனென்றால்மலங்கழித்தல் அதனைச் சுத்திகரித்தல் என்பது இந்திய சமூகத்தில் நிகழும் ஒன்று மட்டுமல்லஉலகம் முழுவதுநடக்கும் ஒன்றுபெரும்பாலான நாடுகளில் இது ஒரு தொழிலாகவும் பாதுகாப்பான கருவிகள் மூலமும் நடக்கும்போதுஇந்தியாவில் / தமிழ்நாட்டில் அப்படி நடக்காமல் தடுக்கப்படுவதில் செய்வதில் அமைப்புகள் மட்டுமேபொறுப்பேற்கவேண்டியன என்பதை விடவும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பு இருக்கிறதுஇந்தியசமூகத்தை விழிப்படைந்த சமூகமாக - நாகரிகமடைந்த சமூகமாக - மனித உரிமைகளைப் பேணும் சமூகமாகஆக்குவதற்கான கல்வியைத் தராமல் திசைதிருப்பும் கல்வி நிறுவனங்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு.இதுபோன்றவற்றை அடிப்படைக்கல்வியாகக் கற்பிக்கத் தவறும் நமது கற்பித்தல் முறை கோளாற கற்கைமுறை.அதன்மீதும் இப்படம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும்அதற்கான வாய்ப்புகளை உருவாக்க இந்தப் படத்தின்சொல்முறையில் சிறிய மாற்றம் ஒன்றைச் செய்திருந்தாலே போதும்.

கக்கூஸ் பொதுவிலிருந்து சிறப்புக்குள் நகர்வதின் மூலம்மற்றபடங்களிலிருந்து வேறுபடுகிறதுஅதன் மூலம் ஆவணப்படம் என்றவகைப்பாட்டிலிருந்து புனைவுப்படம் என்ற வகைக்குள் நகரும்சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது என்றுகூடச் சொல்ல்லாம்மதுரைஆரப்ப்ப்பாளையத்தில் தான் நேரடியாகச் சந்தித்த அனுபவத்திலிருந்துஉந்துதல் பெற்றுதான் இந்தப் பெரும்படத்தைத் தமிழ்நாடென்னும் பரப்பில் எடுத்துள்ளார்இந்தக்கூறு - தூண்டுதல்தரும் அந்த நிகழ்வு சிறப்புப் புள்ளிஅதுவே மொத்தப்படத்தையும் பொதுத்தள விவாதமாக மாற்றும் முயற்சியாகவிரித்துள்ளதுமுள்ளிவாய்க்கால் சாஹாசென்னைபிளவுபட்ட நகரம் மற்ற இரண்டு படங்களிலும்கூட இந்தப்பொது மற்றும் சிறப்பு என்ற தளங்கள் செயல்படவே செய்துள்ளனசென்னையை மதம் சார்ந்த நிகழ்வுகளைச்சிறப்புக்கூறுகளாகக் கவனப்படுத்தி அவற்றைத் தக்கவைக்க முயலும் பாரம்பரியச் சென்னை வெளியால்விரிந்துகொண்டிருப்பதின் மூலம் பின் நவீனத்துவ வெளியோடு மோதிப்பார்ப்பதை - பிளவுண்ட நகரமாகக்காட்டுகிறதுமுள்ளிவாய்க்கால் சாஹாவிலும் போரின் குரூரமாக நகரும் தகவல் பிம்பங்களின் மீது குரல் பதிவாகநகரும் (Voice Over) கேள்விகளும் விவரணைகளும் பொதுசிறப்புத் தளங்களை உருவாக்குகின்றனஇப்படியானஅடுக்குதல் மூலம் ஆவணப்படங்கள் உருவாக்கும் தளர்வுநிலையை இல்லாமல் ஆக்கும் வலிமையைக்கொண்டனவாக ஆகியிருக்கின்றன இந்த மூன்று படங்களும்இப்படங்கள் தமிழர்கள் பார்க்கவும் விவாதிக்கவும்வேண்டிய படங்கள்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை