: 25

இந்த ஆசைக்கு வயது 18.

இந்த ஆசைக்கு வயது 18.

இது நீண்ட நாள் ஆசை. 
1998 இல் விழுப்புரத்தில் ஏற்பட்ட அந்த நள்ளிரவு அனுபவத்திற்குப் பின்னால்தான் இந்த ஆசை உண்டானது. அந்தத் திருவிழாவை எப்படியாவது பார்க்கவேண்டும் என்ற ஆசை வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்த நள்ளிரவு அனுபவத்தைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. அதுவொரு கொடுங்கனவு. கொடுங்கனவு வேண்டாம்; விழாவை மட்டும் நினைவுகொள்ளலாம்.

திருவிழாப் பார்க்கும் ஆசை யாருக்குத்தான் இருந்ததில்லை. சின்னவயசிலிருந்தே பலவகையான திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். வருடந்தோறும் எனது கிராமத்தில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவைத் திருவிழா என்று சொல்வதில்லை.  ‘சாட்டு’ என்றுதான் சொல்வோம்வைகாசிமாதம் கடைசி செவ்வாய் ஊர்கூடி மாரியம்மன் சாட்டு நடந்தால்அடுத்தவாரம் செவ்வாய்கலயம்’ எடுப்புவரை ஊர் சுத்தமாக இருக்கும்முளைப்பாரி போடுதல்தீச்சட்டி எடுத்தல்புதுத்துணி எடுத்தல்தையல்காரரிடம் அளவுகொடுத்துச் சட்டை தைத்துக்கொள்ளுதல் என்று ஒருவாரமும் சாட்டுத்தடைஊரில் மாரியம்மன் சாட்டு நடக்கும்போது இருந்தவர்கள் ஊரைவிட்டுப் போகக்கூடாதுபோனாலும் இரவில் தங்கக்கூடாதுபூசாரி காலையில் குளித்து ஈரத்துணியோடு ஊரின் வடபகுதியிலிருந்து தென்பகுதிவரை நடந்துவருவார்தெற்கே இருக்கும் கோயில் விழுந்து கும்பிட்டு விபூதி பூசிக்கொண்டு திரும்பவும் நடப்பார்கோயிலுக்கு வரும்போது இருந்த ஈரமும் உடலும் முறுக்கேறி நிற்கும்ஆண்களும் வரிசையில் நின்று விபூதி வாங்கிக் கொள்வார்கள்பெண்கள் விலகிநின்று வேடிக்கைபார்ப்பார்கள்விபூதி வாங்கியவர்கள் சொந்தம் என்றால் அவரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள்.  செவ்வாய் இரவு கலயத்தில் தென்னம்பாளையக்கீறி நிறுத்தி மல்லிகைப்பூவைச் சுற்றி அம்மனாக மாற்றிக் கிணற்றிலிருந்து எடுத்துவந்து கோயிலில் வைப்பார்கள்அடுத்தநாள் புதன்கிழமை கலயத்திலிருக்கும் அம்மனை எடுத்துக்கொண்டுபோய் அதே கிணற்றில் கலக்கிவிடுவார்கள்அவ்வளவுதான் அந்தத்திருவிழாஒரு இரவு முழுவதும் வைத்துத்தாங்கும் சக்தி ஊருக்கு இல்லையென்பதால் அதிகாலையில் எழுந்தருளும் அம்மனின் இருப்பு அன்று மாலையோடு முடிந்துவிடும்.
அபாய எச்சரிக்கைகள் கொண்ட மாரியம்மன் சாட்டைவிடஅடுத்த ஊர்களில் சென்று சுதந்திரமாகத் திருவிழாப் பார்ப்பது இன்னும் மகிழ்ச்சியானதுஎங்கள் ஊரின் தாய்க்கிராம்மான எழுமலையில் நடக்கும் முத்தாலம்மன் திருவிழா பெரியதிருவிழாமாரியம்மன் திருவிழாபோல ஒவ்வோராண்டும் நடக்காதுஒருவிதத்தில் வட்டாரத்திருவிழாஎனது பள்ளிப்படிப்புக்காலத்தில் ஒருமுறையும்,கல்லூரிப் படிப்புக்காலத்தில் ஒருதடவையும் நடந்ததுபதினெட்டுப் பட்டிகள் சேர்ந்து நடக்கும் பெருந்திருவிழாஅதுவும் ஒன்றைநாட்கள்தான்ஒரு மாலையில் தொடங்கி இன்னொருநாள் மாலையில் முடிந்துபோகும்.
கிராமத்திலிருந்து தொலைதூரத்துக்குப் போய்ப் பங்கெடுத்த திருவிழா என்றால் இந்த இரண்டும்தான் நினைவுக்கு வரும்முதலாவதுசித்திரை முதல்தேதி மாவூத்து வேலப்பர் திருவிழாஎங்கள் கிராமத்திற்கும் ஆண்டிபட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் மாவூத்து வேலப்பர்(முருகன்கோயிலுக்கு இடையில் இருக்கும் மலையில் நடந்தே கடந்துவிடுவோம்நடை என்றுசொல்வதைவிட ஓட்டம் என்றே சொல்லவேண்டும்நிற்காமல் நடந்தால் 8 மணிநேரம் நடக்கவேண்டும். 8 மணிநேர நடையில் 4 மணிநேரம் மலையேற்றமும் இறக்கமும் உண்டுமாவூத்து வேலப்பர் கோயிலில் கூடும் கூட்டத்தைப் பல ஆண்டுகள் பார்த்திருக்கிறேன். ஆட்டம்பாட்டம்கொண்டாட்டம் என்பதோடு பால்குடம்காவடிஅலகுகுத்தல் எனப் பலநேர்த்திக் கடன்கள் செலுத்தக் கூட்டம்கூட்டமாகப் போய்ச்சேர்ந்து தங்கும் அந்தத் திருவிழாவிற்கு கால்நடையாகவும் போயிருக்கிறேன்வண்டிகட்டிக்கொண்டு ஆண்டிபட்டிக் கணவாயைச் சுற்றிக்கொண்டு 16 மணிநேரம் பயணம் செய்துபோய்ப் பார்த்திருக்கிறேன். 
மாவுத்து வேலப்பர் திருவிழாவைப்போல வண்டிகட்டிக்கொண்டு போன இன்னொரு திருவிழா அழகர்கோவில் திருவிழா. எங்கள் வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் மொட்டைபோடும் கோயில் அழகர்கோவில் என்பதால் சித்திரைத் திருவிழா எப்போதும் நினைவில் நிற்கும் ஒன்று. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்திலும் அங்கேயே இரண்டு ஆண்டுகள் வேலைபார்த்தது வரையிலும் சித்திரைத் திருவிழாவில் நடந்த தூரங்கள் ஏராளம். ஒருமாதம் நடக்கும் சித்திரைத் திருவிழாவின் முன்பகுதி மதுரை நகரவாசிகளுக்கானது. மீனாட்சியை மையமிட்டு நடக்கும் விழாக்களைவிட திருக்கல்யாணத்திற்கு அடுத்தநாள் தொடங்கும் எதிர்சேவையிலிருந்துதான் மதுரைநகரம் அல்லோலகல்லோலப்படும். மதுரை மாவட்டத்தின்  பல ஊர்களிலிருந்தும் வந்து குவியும் கூட்டம் வைகை ஆற்றின் கரையில் தொடங்கிப் புதூர் வரைக்கும் நிரவி நிற்கும். அழகர் கள்ளழகராக மாறி மதுரைக்குள் நுழைந்து ஆற்றில் தங்கைக்குக் கொண்டுவந்த சீர்களை ஆற்றுக்குள் இறங்கி, அந்தக் கரைக்குப் போகாமல் திரும்பிவிடும் எதிர்சேவைதான் சித்திரைத் திருவிழாவின் உச்சம். அப்படியே துலுக்கநாச்சியாரைப் பார்த்துவிட்டுத் தசவதாரம் காட்டுவார். அப்புறம் திருமாலிருஞ்சோலையான அழகர்கோவிலுக்குப்போய்விடுவார்.
இப்படிப்பார்த்த திருவிழாக்களுக்கு இணையாக நினைவில் நிற்கும் சில திருவிழாக்களை இந்தியாவின் சில நகரங்களில் பார்த்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் நடக்கும் அங்காளம்மன் திருவிழா அவற்றில் ஒன்று. கேரளத்தில் நடக்கும் பூரம் திருவிழா, மைசூரில் நடக்கும் தசரா முக்கியமானவை. அண்மையில் இலங்கையின் படுவான்கரைப்பகுதியில் கொக்கட்டிச்சோலைத் தான் தோன்றீஸ்வரர் கோயில் விழாவையும் பார்த்திருக்கிறேன். போலந்தில் இருந்தபோது பார்த்த விழாக்களும் அமெரிக்காவில் பார்த்த விழாக்களும் முழுமையான திருவிழாக்கள் அல்ல. அவற்றின் பகுதிகளைத் தான் பார்த்திருக்கிறேன். சமயம் சார்ந்த விழாக்களில் இருக்கும் பங்கேற்புகள் குறைவான கொண்டாட்டங்களிலும்ம் களியாட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கிறேன்.
நீண்ட காலமாக நினைவுக்குள் உறைந்துகிடக்கும் திருவிழாக்களைப் பற்றிய நினைவுகள் இன்று காலையில் மறு உயிர்ப்புப்பெற்றன. காலை நடைக்காக நான்குவழிச் சாலையைக் கடக்கும்போதே அந்தக் கொடுங்கனவு நினைவுக்கு வந்தது. .சந்தேகமென்று வந்துவிட்டால் காவலர்கள் தங்கள் கடமையை எப்படியெல்லாம் ஆற்றுவார்கள் என்பதை உணர்த்திய கொடுங்கனவு.
கொடுங்கனவு நினைவுக்கு வந்ததால்  இருசக்கர வாகனத்தை அங்கே  நிறுத்தி நடப்பதைத் தொடங்காமல்ஊரைச் சுற்றி வரலாம் என்று தோன்றியது. முக்கியத் திருப்பங்களிலெல்லாம் காவல்துறையினர் விறைப்பாக நின்று கொண்டிருந்தனர்நெல்லையிலிருந்து தூத்துக்குடி வழியாகச் செல்பவர்கள் எல்லாம் நான் இருக்கும் கட்டபொம்மன் நகர் வழியாகச்செல்லும் இந்தப் பாதையைத்தான் தேர்வுசெய்வார்கள்கரடுமுரடான பாதையென்றாலும் பரவாயில்லையென்று நினைப்பவர்கள் சீவலப்பேரி வழியாகப்போவார்கள்.
தீபாவளிக்கு அடுத்தநாள் என்பதால் சாலைகளில் வாகனங்கள் அதிகமில்லைஎன்றாலும் நிறுத்தச் சொல்லிக் கண்ணாடிகளை இறக்கச் சொன்னார்கள்கறுப்புக் கண்ணாடிக்குள்ளிருப்பவர்களைப் பார்த்துவிட்டுச் சலாம் போட வேண்டுமென்றால் “சல்யூட்அடித்துக் கடமையை ஆற்றினார்கள்சந்தேகம்கொண்டு தேடுவதுபோலச் சில வண்டிகளைப் பின்புறக் கதவைத்திறந்து காட்டச் சொன்னார்கள். ஆயுதங்கள் எதுவுமில்லையென முடிவுசெய்துகொண்டு அனுமதி தந்தார்கள். எனது நினைவுக்குமிழியில் கொழுந்துவிட்டெரியும் அந்த ஆசை இதுதான். அது பேராசையொன்றும் இல்லை. பசும்பொன்னுக்குப் போய் நாள் முழுவதும் இருந்து அந்தத் திருவிழாவைப்பார்க்கவேண்டும். அனைத்துக்கட்சிக்காரர்களும் வந்து தங்களின் படையலைச் செய்துவிட்டுப் போகும் காட்சிகளைப் பார்க்கவேண்டும். அணியணியாய்ச் செல்லும் சமூகக்கூட்டங்களும் தனிநபர்களும் செலுத்தும் காணிக்கைகளைப் பார்க்கவேண்டும். பாரம்பரியமான திருவிழாக்களுக்கிணையாகத் தமிழ்நாட்டுக்கே உரியதாக மாறியிருக்கும் - மாற்றப்பட்டிருக்கும் ஒருவிழாவை நேரடியாகப் பார்க்கும் ஆசை நிறைவேறுமா என்று தெரியவில்லை.
எனக்கு இருப்பதுபோலத் தமிழ்நாட்டில் சிலகோடிப்பேருக்காவது இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். திரள்மக்களின் ஆசைகளை நிறைவேற்றும் ஆற்றல் நவீன ஊடகங்களுக்கு இருக்கிறது என்பதை ஏன் நமது ஊடகங்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றன. புரிந்துகொண்டால் முயற்சி செய்துபார்க்கலாமே?. எதையெதையோ நேரலையாக ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் பசும்பொன் தேவரின் குருபூஜையை மட்டும் ஏன் விட்டு வைக்கவேண்டும்? நிச்சயம் விளம்பரங்களுக்கும் குறைவிருக்காது.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை