: 77

பிசாசு எழுதுதல் ( நவீன தமிழ்க் கவிகளின் கவிதைகள்)

விக்கிரமாதித்தியன்
அவர்
இருமிக் கொண்டிருக்கிறார்
இவர்
புகைத்துக் கொண்டிருக்கிறார்
இவர்
பேசிக் கொண்டிருக்கிறார்
அவர்
கிளம்பிக் கொண்டிருக்கிறார்
இவர்
புலம்பிக் கொண்டிருக்கிறார்

பழமலை
வெய்யலூர் மாமாவின் கையில்
பசுமை மாறாமலிருக்கும்
இரட்டை இலை
பராசக்தி வசனம்
வார்த்தை மாறாமல் வந்து விழும்
“ போனால் போகட்டும் போடா”
அதுதான் அவருக்கு
அண்மைக்காலம்.
பிள்ளைகள் சொல்கிறார்கள்
எம்.டிவி.,ஸ்டார் டிவி., சன் டிவி.
விழுப்புரத்துக்கும்
வெய்யலூருக்கும்
எட்டு கிலோமீட்டார் தானாம்.
சாலையோரத்துப் பலகை கூறிக்கொள்கிறது
தூரம்
எட்டு கிலோமீட்டர்.
காலம்?
எட்டு நூற்றாண்டுகள்

நகுலன்
மத்லப்
மத்லப்
லப்மத்
லப்டப்
மத்து லப்பு
மத்லப்
லப் மத்
            சுசிலா
மத்லப்

காற் செருப்பு/பசுவய்யா
செருப்பைக் கழற்றி
அடிப்பேன்
என்கிறாய்.
நான் ஆட்சேபிக்கவில்லை
என்றாலும்
செருப்பை ஓங்கும் அந்தக் கணத்தில்
நீ
சற்று தயங்கக் கூடும்
அப்போது நான் சொல்வேன்
உன்
செருப்பு பிய்ந்துவிடக் கூடுமெனினும்
என் செருப்பாலேயே
என்னை அடிப்பதுதான் அழகௌ
தயங்காதே
அடி.

ஞானக்கூத்தன்
இருக்கிற ஓட்டையில்
ஒரேயொரு ஓட்டையில்
கால் போகிறது

வேரியேஷன்ஸ் ( VERIATIONS) / நாகார்ஜுனன்
அவரவர் மனைவிகளை
அவரவர் காக்க
அனாதை மனைவிகளை
 அரசு காக்கும்
அவரவர் சாமானை
 அவரவர் காக்க
அனாதை சாமானை
அரசு காக்கும்
[எதிர் கவிதையாக எழுதப்பட்டுவரும் நாவலின் தலைப்பு]

பிரம்மராஜன்
ஒரு கச்சித இசைத்தட்டு
அதை வெட்டு
கட்டவிழ்ந்து பரவட்டும்
சரோட்களும் செல்லோக்களும்
ஒரு துல்லிய அலைவரிசையில்
துடிக்கிறது
உன் புயல் உயிர்
மணி அய்யரின் கல்யாணியில்
வீழ்ந்து கொண்டிருக்கிறது
அந்த அருவி
மகத்தான
செய்தி நெடுஞ்சாலை
பில் கேட்ஸைக் கேட்டுப் பார்
நீரின்றி
நீர் - இன்றி
சுரக்காது உலர்ந்த முலைகள்
உனக்கிருப்பதோ
சுவைக்காத நாக்கு
கனவில் எரிமலை
பின்னங்கழுத்தில் நீர்ச்சுழல்

அறிவுமதியின் ஹைக்கூ
மணி அடிக்கிறது
ஆசிரியர் இல்லை
உள்ளேன் ஐயா


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை