: 54

கைத்தடி கேட்ட 100 கேள்விகள்

மல்லாத்தி விடப்பெற்ற 
விஷக்கொடுக்குத் தேள்கள் 
வாலூன்றி நிமிர்கின்றன.

புழுக்களுக்கும் பூச்சிகளுக்கும் 
நாகப்பாம்பின் வீரியம். 
பிடிங்கப்பெற்ற பூரான்களுக்குச் 
செயற்கைக் கால்களின் உதவி.

ஏணியின் கால்களை 
எத்தித் தள்ளும் இடதுகால்கள் 
பரமபதப் பாம்புகள்
உமிழ்கின்றன சொற்களை..

முரண், மோதல், 
எதிர், மாற்று, 
வித்தியாசம், வேறுபாடு 
மறு உயிர்ப்பாகும் 
மொழி மைதானம்

விஷமுறிவில்லா நிலையில்
தாத்தனின் கைத்தடி
100 கேள்விகளோடு சிலம்பாட்டம்
.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை