: 30

நியமங்கள்

அழகர்கோவிலுக்கு 
நேர்ந்துவிட்ட மாடு
காடுமேடு திரியும்

கறுப்புக்கோவிலுக்கு
நேர்ந்துவிட்ட ஆட்டுக்கு
விமோசனம் உண்டு

மாடென்றால் தனிவாசம்
ஆடென்றால் தலைவெட்டு
சேவலுக்குக் கழுத்தறுப்பு
நேர்ந்துவிட்ட வாழ்க்கை

பசுவெனில் பால்
ஆடென்றால் குட்டி
வீடென்றால் மனைவி
காடென்றால் துறவு.

பத்துமணி தொடக்கம்
ஆறுமணிக்கு வரைக்கும்
அலுக்காத சிறைவாசம்.
முளைகட்டிய எருமை
திமிறலின்றுச் சுற்றும்..


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை