: 42

நன்றி கல்யாண்ஜிக்கு பாராட்டுகள் ஜோதிக்கு

துறை முகவரிக்கு வந்த அந்தக் கட்டுக்கடிதத்தைப் பிரித்தபோது உள்ளே இருந்தது சக்திஜோதியின் சங்கப்பெண்கவிதைகள். உடனடியாக நன்றிசொல்ல நினைத்தேன்; சொல்லவில்லை. வாசித்துமுடித்துவிட்டுச் சொல்லலாம் என்று தள்ளிவைத்துவிட்டேன்.

செவ்வியல் தமிழ்க் கவிதைகளைப் பலரும் பலவிதமாக வாசித்துள்ளனர். வெவ்வேறு இயக்கங்கள் முனைப்பாக இருக்கும்போது அவ்வியக்கச் சார்பாளர்கள், செவ்வியல் கவிதைகளை வாசித்துக்காட்டியுள்ளனர். தமிழ்ப் பண்பாட்டுப் பெருமிதத்தோடு திராவிட இயக்க அரசியல்வாதிகளும் தமிழாசிரியர்களும் எழுதியனவற்றை வாசித்துள்ளேன். மார்க்சிய விமரிசனம் முன்னெடுக்கப்பெற்றபோது வர்க்கமுரணை முன்னிலைப்படுத்தி எழுதியனவற்றையும் வாசித்துள்ளேன். இவ்விரு அரசியல் முதன்மைப் பார்வைகளும் அகக்கவிதைகளைவிடவும் புறக் கவிதைகளையே முக்கியமானவைகளாகக் கருதின.ஆனால் சக்திஜோதியின் பார்வையும் எழுதுமுறைமையும் வேறுபட்டது. மொத்தத் தொகைக்குள்ளும் பெண்கள் எழுதிய கவிதைகளைத் தனியாகப் பிரித்துக்கொண்டு அந்தத் தன்னிலைகள், கவிதைக்குள் எழுப்பும் சித்திரமும் உணர்வு வெளிப்பாடுகளும் பெண் தன்னிலைகளின் வெளிப்பாடு என்பதைக் காட்ட முயன்றுள்ளது.

சக்திஜோதியின் எழுத்து தொடராக வந்தபோது எல்லாக் கட்டுரைகளையும் வாசிக்கவில்லை. சிலவற்றை வாசித்தபோது அசையும் சித்திரங்களை உருவாக்கிய அந்த ரசனைக்காகவும் சொல்முறைமைக்காகவும் நூலாக்கம் ஆனவுடன் மொத்தமாக வாசிக்க வேண்டுமென நினைத்திருந்தேன். நேரில் பார்த்தபோது சொல்லவும் செய்திருந்தேன். நூலாக்கம் நடந்தபோது அந்தத் தகவலைச் சொன்னார். வந்தவுடன் அனுப்பிவைப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படிதான் அனுப்பியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். வாசித்தபின் சக்திஜோதியிடம் பேசியபோது, “ சந்தியா பதிப்பகத்திலிருந்து உங்களுக்கு வந்த நூலை நான் அனுப்பவில்லை. அனுப்பச் சொன்னவர் வண்ணதாசன் என்றார். எனது நூலை அவரது கணக்கிலிருந்து 5 பேருக்கு அனுப்பச் சொன்னார். அதில் உங்கள் பெயரும் இருந்தது என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக எழுத்தாளர்கள் அவர்கள் நூல்களையே வாசிக்கத்தருவார்கள். ஆனால் வண்ணதாசன் மற்றவரது நூலை வாசிக்கச் செய்யும் நோக்கத்தோடு அனுப்புகிறார். அவர் தான் வண்ணதாசன். இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னால் நெல்லைப் புத்தகத்திருவிழாவில் வண்ணதாசனைப் பார்த்தபோது நேரில் நன்றி சொன்னேன். இப்போதும் சொல்கிறேன் நன்றி கவி கல்யாண்ஜிக்கு. பாராட்டுகள் கவி சக்திஜோதிக்கு..

No automatic alt text available.
Image may contain: Sakthi Jothi, smiling, text

Show More React


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை