: 39

பூனைகளின் ஊளை


ஓடிக்கொண்டிருக்கும் நாய்களின்
நிழல்கள் தெரிகின்றன.
குரைப்பின் கூச்சல்
கூடிக்கொண்டே இருக்கிறது.

ஏவிவிடப்பட்ட நாய்
நின்ற இடம் தெரிந்தது.
திரும்பிய திசைகூடப் புலப்பட்டது.
கேட்பது முனகல்;

குரைத்த நாயின் முனகலென
தீர்மானம் கொள்ளாதே.
பூனைகள் நாயின்
குரலில் கூச்சலிடுகின்றன.

தந்திரப் பூனைகளின்
ம்யாவில் நாய்களின் ஊளை
ஓடும் பாதையை 
திருப்பும் எத்தனம்.
.
நிழல்களின் ம்யாவ்க்கு செவியை மூடு
தாக்கும் மனத்தோடு திரும்பாதே..
முட்டுச் சந்துகளில் செவிப்பறை கிழியும்


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை