: 50

நகல்களின் ஊடே ஒரு பயணம்…

நகல்களின் ஊடே ஒரு பயணம்

நமது காலம் நகல்களின் காலம்.

காகித நகல்கள் மட்டுமல்ல

மனித நகல்களும்

மலிவாகவே கிடைக்கின்றன.

உங்கள் நகல்களுக்கு வயது என்ன இருக்கும்

நினைவுச் சக்கரத்தைத் திருப்பிச் சுற்றுங்கள்

பிறந்த நாட்கள்..,

ஓராண்டு..ஈராண்டுப் பிறந்த நாட்கள்..

சீருடைபோட்டுச் சென்ற நாள்,

பெரிய மனுசி ஆன நாள்,

கணவனாகவும்  மனைவியாகவும்

காலம் கணித்த கனவு நாட்கள்

கனவான்களெனக் கருதிக் கொண்டு

கம்பீரமாக நின்ற நாட்கள்

நல்ல நாட்களும்

நகல் எடுக்கும் நாட்களும்

ஒன்றாக இருந்த நாட்கள் எனச் சில  இருந்தன.

இவை எல்லாம் இருப்பவர்களுக்குத் தான்.

இல்லாதவர்களுக்கு இவை எதுவும் இல்லை தான்

இருப்பவர் - இல்லாதவர் என்னும்

இருவேறு உலகத்தியற்கை.

நகரெங்கும் நகல்களின் கூடாரங்கள்.

அழைக்கின்றவர்களாய்..அசைகின்றவர்களாய்

விரிக்கின்றவர்களாய்..விற்கின்றவர்களாய்..

எண்ணெய் வண்ணத்தில் இரும்புத் தகடுகள்.

படபடக்கும் வண்ணக் காகிதங்கள்..

பளபளக்கும் வினய்ல் படுதாக்கள்..

நகல்கள் மலிவாகக் கிடைக்கின்றன.

பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன..

புகைப்படங்கள்,.  நிழல் படங்கள்.. வண்ணப்படங்கள்..

வெண்மையும் கருமையும்

வண்ணங்கள் அற்ற வண்ணங்கள்.

காலம் கரைத்த குடுவைக்குள்

கறுப்பும் வௌ¢ளையும் காணாமல் போய்விட்டன.

அது ஒரு முடிவின் தொடக்கம்

தொடக்கத்தின் முடிவு

நினைத்துப் பாருங்கள்

நினைவுகளைத் திருப்பிப் பாருங்கள்

நமது குழந்தமை .. , நமது குமரப்பருவம்

நமது நட்புக்கள்,.. நமது குடும்பத்தினர், ..

நமது நாகரிகம்நமது மாற்றங்கள்..

முகம் பார்க்க வேண்டி தலையைத்தூக்கி

நிழலைப் பிடிக்கக் கையையூன்றி.. ..

காற்றை நிறுத்த  விரல்களை அசைத்து

தவழுதல் வேண்டிய  தருணங்கள்..

விழுதல் வேண்டிய விளையாட்டுக்கள்

தள்ளுவண்டியின் பயணங்கள்..

மட்டக் குதிரையில் ஊர்வலங்கள்..

பொக்கைவாய்த் திறப்புக்களும்

புன்னகையின் மடிப்புக்களும்

 ஆடைகளில் தான் எத்தனை மாற்றங்கள்

ஒற்றை வண்ணம் பலவண்ணங்களாக.

சின்னப் பூக்கள்.. பெரிய பூக்கள்

நீண்ட கைகள்.. குட்டைக் கைகள். .

படமெடுத்தாடிய சடைகள் முன்னே

பார்க்க விரியும் மையுண்ட கண்கள்

அகன்ற கால்களுடன் அலையும் பேண்டுகள்

விரியும் காலர் விசிறி மடிப்புக்கள்

நாகரிகம் நம்மை நகர்த்தி வந்தது.

குறுகுறுப்புக்கள் கொண்ட குமரப்பருவம்..

வேறுபாடுகள் உணரும் வேகம் அதன் சாரம்..

 

அரும்பிய மீசைகள் அலையும் கூந்தல்கள்

கனவுகள் பிறக்கும் கண்ணாடிகள்

கண்ணாடிக்குள் நிஜம்

நிஜத்தின் நிழல் வெளியே..

தம்பதிகள்.. .. இளம் தம்பதிகள்..

இருவரும் நின்ற காலங்கள் நகர..

கணவன் இருக்க மனைவி நிற்க.

மனைவி இருக்கக் கணவன் நின்ற

கணங்களும் வந்தன

யார் சொல்ல முடியும் நாகரிகம்

நம்மை நகர்த்தவில்லையென்று

எதிரெதிர் அமர்ந்து

கால்மேல் காலிட்ட கணங்களும் வந்தன

குடும்பம் ஒரு புறம் குதூகலம் தான்..

குடும்பம் ஒரு புறம் கூட்டல் கழித்தல்தான்

குடும்பத்தின் விருப்பம் அடையாளங்கள்..

குடும்பத்தின் விருப்பம் கொண்டாட்டங்கள்..

உறவின் அடையாளம். உடைமையின் அடையாளம்..

சாதியின் அடையாளம்.. மதத்தின் அடையாளங்கள்

அடையாளங்கள் விருப்பங்களாகக்

 கொண்டாட்டங்கள் அடையாளங்களாகும்

குடும்பம் விரும்புகிறது கொண்டாட்டங்களை..

குடும்பங்கள் வேண்டுகின்றன அடையாளங்களை..

குடும்பம் விரும்புகிறது கட்டுப்பாடுகளை

ஆனால் தனியனின் விருப்பம் விட்டு விடுதலையாதல்

விட்டு விடுதலையாகி

ஒரு சிட்டுக் குருவியைப் போல

 

 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை