: 47

கறுப்பின் பயணம்


 மூடப்பட்ட புதைகுழியிலிருந்து

எழுந்து புறப்பட்டது கறுப்பு.

சாப்பிட நினைத்து முடியாமல்

போனதெல்லாம் நினைவில் இருந்தது.

நினைவுகளெதற்கெனப் பிடிவாதம்.

புதிய விருப்பங்களும்

ஆசைகளும் நினைவுகளாயின.

ரத்தங்குடிப்பதோ மயானக்கொல்லையோ

ஆழ் மனமாகிட மிதந்து நகர்ந்தன.

கிளிப்பச்சைப் புடவைகள்,

வெண்பட்டுக்குஞ்சங்கள்.

காலைக்குளிரில் மென்பாதம்

உரசும் கொலுசுகளோடு

ஜெபமாலை உருட்டும் விரல்கள் வேண்டும்.

கண்கள் மூட நெற்றியில் சுழலும்

அக்னிக்கு மாற்றாய்

 நெய்விளக்கோடு நெகிழ்ந்து நழுவும்.

 புன்னகை வேண்டும்.

 புழுதி கிளம்பப் போட்ட

      குதியாட்டம் போதுமென்றானது.

 

வாகனமில்லா வாழ்க்கை வெறுத்து ஊழி பலவாச்சு.

சாலைதழுவி விரைவு காட்டும் வாகனமொன்றை

நேர்த்திக் கடனாக்கு.

பக்தனே உனது பக்தியை மெச்சிட

வழியெதுவென்றால் சாலை வரிகட்டி

இன்ஸ்யூர் செய்த வாகனக்காணிக்கை

முடிவது ஒன்றே.

 

கறுப்பின் பயணம் காற்றில் அல்ல

காற்றினும்

கடிதாய் விரையும் காரில்.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை