: 49

திருத்தி எழுதப்பட்ட கவிதை

 

காலம் கணகாலம் ஆனதற்குப்

பின்னான சந்திப்பு.


பொய்களை வாங்கி விற்று

வளர்ந்து பெரியவர்களான 

கதையைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

உண்மையைப் பேசிவிடும் நினைப்பில் 

நிறுத்தி நிறுத்திப் பேசிக் கொண்டிருந்தான்.

பொய்களைத் தரிசிக்கும் திளைப்பில்

நெருக்கம் குறைந்துவிடக்கூடாதென்ற

கவனத்துடன் காதுகள் சிமிட்டவில்லை. 


உண்மைகளிடம் தருவதற்காக

உண்மையைச் சொல்லச் சொன்னாள்.

பொய்யைப் பொய்யாக மட்டுமே

சொல்லத் தெரிந்தவன்

உண்மையாகவே திணறிப்போனான்.


பொய்யை எப்படிச் சொல்ல முடியும்.?

பொய் அன்புக்குரியது. ஆசைப்படுவது.

அன்பும் ஆசையும் உண்மையல்ல; பொய்

யெனச்சொல்ல யாருக்குச் சாத்தியம்?


பொய்கள்.பொய்களை நேசிக்கிறது 


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை