: 61

ஊடகங்கள் சொல்கின்றன:

ஊடகங்கள் சொல்கின்றன: 


இப்பெருநகரில்

பேருந்துகள் ஓடவில்லை.


ஊடகங்கள் சொல்கின்றன:

சிறியதும் பெரியதுமான வாகனங்களால்

போக்குவரத்துக் காவல்துறை

விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது.

அவர்களின் வேலைக்குப் பாதகமில்லையெனக்

காவல்துறைக் கண்காணிப்பாளர்

அறிவிப்புச் செய்துவிட்டார்.


ஊடகங்கள் சொல்கின்றன: 


சட்டம் ஒழுங்குக் காக்க வேண்டியவர்கள்

பதற்றமின்றி ஓய்வில் இருக்கிறார்கள்.

ஆனால் ஆச்சரியம் பாருங்கள்.

அதன் பொறுப்பிலிருக்கும்

கண்காணிப்பாளர் மட்டும் பதட்டத்தோடு தவிக்கிறார்.

புத்தாண்டுச் சந்திப்பில் என்ன பரிசுகள் கிடைக்கும்;

என்ன பரிசைக் கொடுக்கலாம்

என்பதே தவிப்பின் காரணம்.


ஊடகங்கள் சொல்லவில்லை:


கிறிஸ்துமஸ் விடுமுறையில்

சென்னைக்கு வந்தவன் சிக்கித் தவிக்கிறேன்.

மகன் குடியிருக்கும் மேடவாக்கத்திலிருந்து

மகள் வீடிருக்கும் அம்பத்தூர் செல்ல

ஐம்பது ரூபாய் போதுமானதாய் இருந்தது.

நகரப் பேருந்தில் நகரமும் தெரியும்; நகரவும் செய்யும்.

அவசரம் கருதி அழைப்புக் கொடுத்தால்

 “அரைநாள் காத்திருக்க ”என

அன்போடு சொல்கிறாள் நேர ஒழுங்குக்காரி.


ஓட்டை உடைசல் பேருந்துகளையெல்லாம்

காயலான் கடைக்கு அனுப்பிவிட்டுச்

சொகுசுக்காரில் செல்ல வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளும் தயார்;மக்களும்தயார். 


 ‘கார்’ வைத்திருப்போர் நகரில் இருக்கலாம்.

‘கார்’இல்லாதவர் கிராமங்கள் ஏகலாம்.

நகரமும்வேண்டாம்; கிராமமும் வேண்டாமென்றால்

இருக்கவே இருக்கு ; திரிசங்கு சொர்க்கம்.


ஊடகங்கள் சொல்லவில்லை


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை