: 62

காவிரிப்போராட்டத் திசைவிலகல்கள்

உற்பத்தியான இடத்தில் இருப்பவர்களுக்கே இயற்கை வளம் சொந்தம் எனச் சொல்வதும் வாதிடுவதும் இயற்கை நீதிக்கு எதிரானது. அப்படியான வாதங்களால் இயற்கையின் போக்கைத் தற்காலிகமாகத் தடுக்கலாம்; நிறுத்தலாம். நிரந்தரமாக அல்ல. காவிரி நீர்ப்பெருக்கு எடுத்தால் தமிழ்நாட்டிற்குள் பாய்ந்து வரவே செய்யும். எத்தனை அணைகளைக் கட்டிவிடமுடியும். கர்நாடகத்தின் காவிரியால் ஏற்பட்ட அழிவுக்கு நட்ட ஈடு தரவேண்டுமென இதுவரைத் தமிழகம் வாதிட்டதில்லை. காவிரி தமிழ்நாட்டிற்கும் சொந்தம். அதனால் ஏற்படும் நன்மையும் தீமையும் கர்நாடகமும் ஏற்கவேண்டும்; தமிழ்நாடும் பகிர்ந்துகொள்ளவேண்டும். அதுதான் இயற்கை நீதி. இயற்கைநீதியை அரசியல் சட்டமாக்கி நிர்வாகம் செய்வது இந்திய ஒன்றிய அரசின் கடமை. இந்திய ஒன்றியத்தை ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் இதனை உணரவில்லை.

நீதியைப் போராட்டங்களால் பெறமுடியும் என்பது இப்போதுள்ள நெருக்கடி. மூன்றுபோகம் விளைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குத் தண்ணீர் வேண்டும். மூன்றுபோகம் இல்லையென்றாலும் இரண்டு போகத்திற்காவது நீரைத்தரவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் நீர்வர வேண்டும்; டெல்டா வேளாண்மை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பெருநகரங்களுக்கும் காவிரிக்கரையோர மாவட்டங்களுக்கும் குடிநீராதரமும் பொன்னி நதி. இதனை உறுதிசெய்யக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். இதுதான் தமிழ்நாட்டின் கோரிக்கை.

காவிரி குறித்த சொல்லாடல்களும் செயல்பாடுகளுமே மையக் கோரிக்கை என்றால், போராட்டங்களும் அதைக் குவிமையப்படுத்தியே இருக்கவேண்டும். மைய அரசின் அதிகாரமும் கண்காணிப்பும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கும் இடங்களைக் குறிவத்துத் தாக்கும் போராட்டங்களையே மேற்கொள்ளவேண்டும். தாக்குதலின் முறைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை அந்தந்தக் கட்சிகளின் இயல்புக்கேற்ப உருவாக்கிக் கொள்ளலாம்.அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களை அதிகாரத்திலிருந்து இறக்க இருக்கும் ஒரேவழி வாக்குரிமையைத் திரட்டிக்காட்டுவது. திரட்டிக் கொள்வது இப்போதுள்ள வழிமுறை அனுமதிக்கப்பட்ட வழிமுறை.. மக்களாட்சி அமைப்புக்குள் செயல்பட விரும்புபவர்கள் அச்சமூட்டும் ,கோபத்தை - வெளிப்படுத்தும் குறியீட்டுப் போராட்டங்களைச் செய்யலாம்.பெருந்திரளாக ஆயுதங்களோடு கிளம்பும் கூட்டம் பயன்படுத்தாமல் உண்டாக்குவது மருட்கை. பயன்படுத்த முடியும் என உணர்த்துவதின் வழி உண்டாக்கும் உணர்வும்கூடப் போராட்டமே.

மக்களாட்சிக்காலத்தில் அங்கதமும் கேலியும் எள்ளலும் கிண்டலும் தான் உச்சமான போராட்டங்கள். ஹிட்லருக்கெதிராகப் பலர் பயன்படுத்திய உத்திகள் இவ்வகை உணர்வுகளைக் கொண்டவை. தன்னை வதைத்துக்கொண்டு உடன்பாடில்லையெனக் காட்டுவது காந்தியும் மண்டேலாவும் காட்டிய வழிமுறைகள். இவைகளுக்கு மாறாக ஐபிஎல் போட்டிகளைத் தடுப்போம்; சுங்கச் சாவடிகளை உடைப்போம் எனக் கிளம்புவது திசைமாற்றங்கள். 
சுங்கச் சாவடிகளின் வசூலிக்கப்படும் பணம் பகல்கொள்ளை மட்டுமல்ல; 24 மணிநேரக் கொள்ளைதான். அதனை எதிர்ப்பதும் எதிராகப் போராடுவதும் தனிப்போராட்டம். காவிரிநீருக்கான போராட்டத்தோடு நேரடித்தொடர்பு கொண்டதல்ல. காவிரியிலிருந்து திசைதிருப்பும் சொல்லாடல்களை உருவாக்கும்.அதனை நொறுக்குவோம் எனக் காட்டியதின் வழி சட்டம் ஒழுங்குச் சிக்கல் என்னு சொல்லாடலை உருவாக்கி விட்டது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விளையாட்டிலும் சேராத, கேளிக்கையிலும் சேராத புதுவகையினம். அதன் பார்வையாளர்கள் மனித வளத்தைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பைத் தவறவிட்டு நேரத்தை இழந்தவர்களாகிறார்கள் என்பது உண்மை. அதன் தாக்கம் மனிதர்களை மந்தைகளாக்கும், பிம்ப வழிபாட்டுக்குரியவர்களாக்கும் செயல். அதனை உணரச்செய்வது தேவை. ஆனால் அதன் பார்வையாளர்களாகிய நடுத்தரவர்க்கம் காவிரியோடு நேரடித்தொடர்பில்லாதவர்கள். வாக்கரசியலில் தீர்மானங்களை உண்டாக்கும் வல்லமை கொண்டவர்கள். அவர்களின் விருப்பங்களைத் தடுப்பவர்களை எதிர்நிலையில் பார்க்கவே செய்வார்கள். தங்களின் கேளிக்கைகளில் ஒன்று தடுக்கப்படும்போது அதற்குக்காரணமானவர்களை அரசியல் தளத்திலிருந்து அப்புறப்படுத்தும் அதிகாரத்திற்குத்தான் துணை நிற்பார்கள்.

இத்தகைய திசைமாற்றங்களை முதலில் அதிகார அமைப்புகள் அனுமதிக்கவே செய்யும். அதன் மூலம் அதில் ஈடுபடுபவர்களை அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்ற முத்திரை குத்துவதற்கான ஆதாரங்களை உருவாக்க அது தேவை. அத்தோடு எல்லாவகைப் போராட்டங்களையும் தடுக்கும் ஒடுக்கும் தடைசெய்யும் சட்ட நடவடிக்கைகளில் இறங்கவும் இதுபோன்ற ஆதாரங்கள் தேவை. அத்தோடு மென்போராட்டங்களில்கூட ஈடுபடாமல் வீட்டிலிருந்தபடியே ‘ போராட்டங்கள்; புரட்சிகள்’ என்னும் சாகசங்களை நேசிக்கும் மனிதத் திரளுக்குக் கூடுதல் சாகசங்களை முன்வைப்பவர்கள் மேல் ஒருவிதக் காதல் உண்டாவது நடைமுறை. இந்தியாவில் எல்லாக் காதல்களும் நடைமுறைச் சாத்தியமாதில்லை, திடீர் சாகசங்களால் ஏற்படும் காதல் வாக்குகளாக மாறாது.
தடைகளும் வன்முறைகளும் எப்போதும் அரசின் கருவிகளாகவே இருக்கின்றன. வலிமையாகவும் இருக்கின்றன. குவிக்கப்பட்ட வன்முறை அதிகாரம் கொண்ட அரசை, அதனை இயக்கும் அரசியல் குழுவை எதிர்ப்பதற்கான போராட்டங்கள் தடுப்பனவாகவும் வன்முறையைக் காட்டுவனவாகவும் இப்போதைக்கு இருக்க முடியாது. எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்
============================================================ 
பெரும் தன்னிச்சைத் தணிப்புக்காரர்கள் என்னும்
சித்திரத்திற்காக சால்வடார் டாலிக்கு நன்றி
===========================================

No automatic alt text available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை