: 66

பிரிப்பின் கனவுகள்

அவர் கொங்குநாட்டுத் தங்கம். 
இவர் பாண்டியநாட்டு மணிமகுடம். 
இன்னொருவர் சோழ வளநாட்டுச் சிற்பி. 
மற்றொருவர் பலலவ நாட்டுப் பைங்கிளி.
வேறொருவர் வேங்கி நாட்டு வெண்ணிலா.

வாக்குகள் வாங்கவும் 
வாங்கியபின் விற்கவும்
வக்கணைப் பேச்சு.

பிரிந்து கிடப்பதும் 
பிரித்துப் பேசுவதும் 
அவரவர் கூச்சல்.
அவரவர் கூத்து.

காவிரியில் தண்ணீர் 
தமிழக உரிமை
தஞ்சை நிலவளம் 
தமிழர் வாழ்வு.
தூத்துக்குடி காற்று 
தமிழர் உடல்நலம்

தமிழ்நாட்டுக் கல்வி 
தமிழர் தீர்மானம்
தமிழ் நாட்டுக் கடல் 
தமிழர் மீன்வளம்
தமிழர் வாழ்வு 
பிரிவதில் இல்லை
தமிழர் வாழ்க்கை 
தாழ்தலில் இல்லை.

கொங்கனும் கூன்பாண்டியனும் 
குனிந்த தலை நிமிர்ந்ததில்லை
சிற்பியோ சின்னப்பசுங்கிளியோ
சிக்கிக் கொள்ள வழியுமில்லை 
வேங்கியின் வெடிவேந்தன்
வேடிக்கை தீர்வதில்லை.

Image may contain: sky, outdoor and nature

Show More Reac


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை