: 52

நாட்டுக்குள் வந்த காட்டு ராஜா


என்ன செய்துகொண்டிருக்கிறாய் 
சிங்கராஜா?.

சிங்கராஜாவாக இருக்கிறேன். 
சிங்கராஜா, சிங்கராஜாவாக 
இருப்பதைத் தவிர 
வேறென்ன செய்ய வேண்டும்?

காட்டு வாசத்தைவிட்டு 
நாட்டுவாசம் தொடங்கியபின்
ஆட்சி பரிபாலனப்பொறுப்புகள் 
அதிகமாகி இருக்குமே?

அப்படியொன்றும் தெரியவில்லை. 
நடக்கவேண்டியபடி 
நடந்துகொண்டு தான் இருக்கிறது. 
அதுஅது .. அப்படி அப்படி..
எதுஎது.. எப்படி எப்படி.. .

மதிநிறை மறையோரிருக்க 
ஆட்சிக்கட்டில் யாருக்குச் சுமை?
காட்டாட்சிதான் நாட்டாச்சி.. 
நாட்டாச்சிதான் காட்டாச்சி.

கலவரம் தொடங்கிக் 
காதல் வரைக்கும்
எழுதப்பெற்ற சூத்திரப்படி 
எல்லாம் நடக்கிறது..
இயல்பாய் நடக்கிறது.
பொங்கல் முதல் போதைவரை

கொல்லப்பட வேண்டியவர்கள் 
பட்டியல் கையில் இருக்கிறது. 
கருவிகள் கையாள்வோர் 
களத்தில் இருக்கின்றனர். 
தள்ளவேண்டிய தொகைகளுக்கும் 
கணக்குகள் இருக்கின்றன.

நாய்க்கடி நடிகளும் 
பேயாட்டக் கடிகளும்
பெருமாளைப் பேணாக்க..
பேணைப் பெருமாளாக்க
வாய்ச்சொல் வீரர்களோடு
எண்மயத் திரைகளும்..
கை காட்டும்... திசைதிருப்பும்...

நல்லது ராஜா..ராஜாதிராஜா..
எங்கள் சிங்கராஜா..
ஒரேயொரு சந்தேகம்..

’முரசுகட்டில் ஏறியபின்
முழு உயரக் கண்ணாடிமுன்
முகம் பார்த்ததில்லையா.. ? 
உங்கள் முதுகு பார்க்கவில்லையா..?’

”பல்துலக்கும் பழக்கம் 
விட்டுப்போன நாள்முதல்
முகம்பார்க்க மறந்துவிட்டேன்.
முதுகுசொறியவும் மறந்துவிட்டேன்..

காடுவிட்டு நாடுவந்த ராஜாவே
சிங்கராஜாவே.. கொஞ்சம்
வீட்டுக்கும் போய்வாருங்கள்..
ராணியார்முன் சிரித்துக்
காட்டிப் பாருங்கள்...

சிங்கராஜா ஏனிப்படி 
அசிங்கமாகிப் போனாரென்று
கண்கலங்கக் கூடும்.
கதிகலங்கக்கூடும்..
நாட்டுமக்கள் கருத்தோடு
ராணியார் சொல் ..?
அது முக்கியம் அதிமுக்கியம்..

No automatic alt text available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை