: 44

ரஜினியின் குறும்பயணம்: நடிப்பால் நிரப்பும் நுரை


பாட்ஷா என்னும் மிகப்பெரிய வெற்றிப்படம் உருவாக்கிய அலையை பாபா (2004) என்ற மோசமான தோல்விப் படம்தான் சமநிலைக்குக் கொண்டு வந்தது. பாட்ஷாவுக்கும் பாபாவுக்கும் இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படமாக முத்து(1995), அருணாசலம்(1997), படையப்பா(1999) என மூன்று படங்களை வெளியிட்டுச் சில நூறு நாட்களுக்குத் திரையரங்குகளை நிறைத்து லாபம் ஈட்டிக் கொண்டதோடு தனது பொதுமனிதன் மற்றும் அரசியல் பிம்பத்தையும் உடன்நிகழ்வாகவே உருவாக்கி வந்தார்ரஜினிகாந்த்.

பாபா படத்தின் தோல்வி, ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்லாது அவர் உருவாக்கிக் கட்டமைத்த அரசியல் பிம்பத்திற்கும், பொதுமனிதன் அடையாளத்திற்கும் கூடப் பங்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை நமது நினைவுகள் அழித்து விட்டிருக்காது. 
”கடவுளே வந்தாலும் காப்பாற்றமுடியாது” என்று கைநீட்டிக் குற்றஞ்சாட்டிய ரஜினிகாந்த் அவரைக் கொண்டாடுகிறார்;பாராட்டுகிறார். இந்தத் ”தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பை அதே அஇஅதிமுகவிடமே ஒப்படைக்கலாம்” எனச் சொல்லப்போகிறார். ரஜினிகாந்தின் இந்த நகர்வு ஒன்றை இன்னொன்றால் நிரப்பும் உத்தி. பொது மனிதன் அடையாளத்தைக் கைவிட்டுவிட்டு ஆளும் கட்சியின் அடையாளமாக ஆகப்போகும் நகர்வு.

அந்த நகர்வின் முன்னோட்டமாக நேற்றையக் குறும்பயணத்தையும், பயணத்தின் முடிவில் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பையும் பயன்படுத்திக்கொண்டு ‘ தனது அரசியல் போராட்டங்கள் இல்லாத அரசியல்’ எனச் சொல்வதோடு, எல்லாவகைப் போராட்டக்காரர்களையும் ஒடுக்கும் அரசியலாக இருக்கும் என்பதையும் முன்வைத்துவிட்டார்.

அவர் ,தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்பை மறுக்கப்போகும் பொதுநிலைத்தேர்வை எதிர்க்கும் போராட்டத்தை,

மனிதர்களைக் கீழ்மேலாக்கிக் குதறும் சாதியவாதத்தைக் கேள்விகேட்டும் உரிமைக்கேள்விகளை முன்வைக்கும் போராட்டத்தை

தமிழ்நாட்டு வளங்களை வளர்ச்சியென்ற பெயரில் பன்னாட்டுக் குழுமங்களும் அதோடு தரகு அடிப்படையில் இயங்கும் வடநாட்டு முதலாளிகளும் கொள்ளையடிப்பதைச் சுட்டிக்காட்டும் போராட்டங்களை
மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகளின் நீர்ப் பங்கீட்டைச் சீர்படுத்தாமல், கட்சியரசியல் லாபத்திற்காகத் தள்ளிப்போடும் அரசியலை அடையாளப்படுத்தும் போராட்டத்தை

அரசுகள் உருவாக்கிய விதிகளை அவைகளே தளர்த்திச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, வாழிடத்தின் காற்றும், நீரும், மரங்களும், வயல்களும் கெட்டுப் போவதைக் காட்டித் தடுக்க நினைக்கும் போராட்டங்களைச் “சமூகவிரோதிகள்” நடத்தும் போராட்டங்கள் என முத்திரையிட்டுத் தடுக்கும் ’தேசியவாதி’யாக நடிக்கத்தொடங்கியிருக்கிறார்.

இந்த நகர்வு அவரின் உச்சநட்சத்திர நடிப்பில் உச்சமாக அமையப்போகிறது.தேர்ந்த இயக்குநரின் கைப்பாவையாக நடிக்கப்பட்ட நடிப்பு இது. அதன் மூலம் உச்ச அதிகாரத்திற்குக்கூட அவர் நகரலாம்.

இந்த நகர்வு - தேர்ந்த நடிப்பு - நல்ல நீரால் நிரப்பிக்கொள்ள வேண்டிய அண்டாவில் சோப்புப்பொடியைப் போட்டுக் கலக்கிவிட்டு உருவான நுரையால் நிரம்பும் முயற்சி. சோப்புநுரையில் மினுக்கும் வண்ணங்களின் கவர்ச்சியில் மயங்காமல் நிற்கவேண்டியவர்கள் வாக்காளர்களாகிய மக்கள் மட்டுமே.

No automatic alt text available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை