: 42

ஒருவகையான மாற்றம் மட்டுமே பேசப்பட்டுள்ளது.

ஒருவகையான மாற்றம் மட்டுமே பேசப்பட்டுள்ளது.
==============================================
பாரதி, நவீனத்தமிழ் இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி என்பதைக் கணிப்பதில் தொடங்கி யதார்த்தவாதமும் நவீனத்துவமும் இணையாக நகர்ந்த பயணமே இலக்கியத்துறையில் நடந்த மாற்றங்கள் என முடிக்கிறார். யதார்த்தவாதத்திலும் நவீனத்துவத்திலும் உருவான மறுப்புகள், கிளைகள் - வட்டார இலக்கியம், தலித்தியம், பெண்ணியம் போன்ற அடையாள இலக்கியங்களை மாற்றங்களாக நினைக்காமல் நகர்வது எப்படி முடியுமெனத் தெரியவில்லை.
நம் காலத்தை- நம் காலத்துச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தோடு எழுதுவதாகச் சொல்லும் நவீன இலக்கியம் அவை தோன்றிய காலத்துப் பெருநிகழ்வுகளை எழுதவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே நிலையை - அதே பார்வையை மரபிலக்கியத்திற்கும் தரத்தான் வேண்டும். ஆகப்பெரும் நிகழ்வுகளை எழுதவேண்டுமென்று எப்போதும் எவ்வகை இலக்கியம் நினைப்பதில்லை.

மரபுத் தமிழிலக்கியம் பற்றிய ஜெயமோகனின் கூற்றுகள் அனைத்தும் ஆய்வின் பாற்பட்டதாக இல்லை. ”எழுபருவப்பெண்கள் காத்திருத்தல் கலம்பகத்தின் - உறுப்புகள் அல்ல; உலாவின் பகுதி”யென்று சுட்டிக்காட்டியெல்லாம் நான் மறுக்கப்போவதில்லை. மரபிலக்கியத்தைத் தத்துவத்திற்கு முந்திய காலம், தத்துவக்காலம், தத்துவத்திற்குப் பிந்திய காலம் என வகைப்படுத்தி தத்துவப் பின்புலம்தான் சிலம்பு போன்ற பெருங்காப்பியங்களை உருவாக்கின எனப் போகிற போக்கில் சொல்வது விவாதத்திற்குரியது. 
உடலின் கிளர்ச்சிபற்றியும், மனித வாழ்க்கையின் நிலையாமை பற்றியும், குடும்பம், அரசு, உற்பத்தி முறைகள், பங்கீடுகள் போன்ற அமைப்புகளின் இருப்புபற்றியும், , தேவைகள் பற்றியும் சங்கப் புறப்பாடல்களில் காத்திரமான வரிகள் உள்ளன. குறைவாகக் கிடைக்கும் கணியன் பூங்குன்றனின், பாண்டியன் அறிவுடை நம்பியின் பாடல்கள் எழுப்பும் கேள்விகள் தத்துவம் சார்ந்தவை. கபிலர், பரணர், அரிசில் கிழார், ஒளவை போன்ற அதிகம் பாடியவர்களின் கவிதைகள் பேசும் தத்துவம் பின்னர் சமயங்களாக அறியப்படும் அமைப்புகளின் தத்துவ முன்வைப்புக்கு மாறானவை. விரிவாக விவரித்து எழுதக்கூடியன. காப்பியங்களுக்கு முன்னர் தோன்றியனவாக அறநூல்களும் அவை பேசும் தத்துவங்களும் தமிழ்நாட்டின் சிந்தனைப்பள்ளிகளைத் தோற்றுவித்தன. அவைகளின் திரட்சியே சிலப்பதிகாரமும் மணிமேகலையும்.

YOUTUBE.COM
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் மாறும்…


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை