: 48

நாட்டரசியல் : இரண்டு குறிப்புகள்


சோபிதமலர் சூடுக
===============================
சிலேபிக் கெண்டை சாளையோடு சிவணி
உப்புக் காற்றில் தாவிக் குதித்த
நெய்தலங் கானல்! நெய்தலங் குருவி!

காடழித் துலோக முருக்கிக் கசிந்த
சூனியக் காற்றில் கால்சியம் கூடிக்
கோளும் ஏடும் வீடும் கேடுற
கலந்த தந்த நகரவீதி நாளும் 
எழுந்தது ஒழிகவென் பேய்க்குரல்
மனிதப் புழுதி ஆயிரமா யிரம்
குண்ட டிபட்ட கூக்குரல் கேட்டு 
எத்திசைச் செலினும் அத்திசை ஒலிக்கும்

வடவேங் கடம்தென் குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நாடும் நாட்டினுள்
எம்குன்று மோதித் திரும்பியுன் குன்றில்
அலையும் எதிரொலிக் கெடுமதி நாவக
அற்றைத் திங்களும் இற்றைத் திங்களும் 
ஆறாத் துயரில் வாழிய தொலைந்தது
ஒழிகவென் இடிக் குரலில்
உலகமாறும் ஓங்கியொலித் தனை சோபித மலரே!
============================================
திணை: நாட்டரசியல்.
துறை: மகட்பேறு பெருமிதம்.

Image may contain: one or more people, fire and night


மனித இயந்திரங்கள்
===================
நடந்த தவறுகளைச் சரிசெய்யவும், நடக்கவிருக்கும் தவறுகளைத் தடுக்கவும் உருவாக்கப்படும் எந்திரங்கள் -உலோகத்தாலான எந்திரங்கள்- எதனையும் தன்போக்கில் தள்ளிவிடுவதில்லை. அதற்குரிய பொறுப்பைத் தட்டிக்கழிப்பனவும் அல்ல. ஆனால் அரசு இயந்திரங்கள்- இந்தியாவில் செயல்படும் சாதாரண அரசு அலுவலகங்கள் தொடங்கி, சட்டமன்றங்கள், பாராளுமன்றங்கள், நீதிமன்றங்கள் உள்பட்ட அனைத்து அரசு எந்திரங்களும் எல்லாவற்றையும் தள்ளிப் போட்டுவிட்டுத் தப்பிக்கப் பார்க்கின்றன. ஏனெனில் இவை உலோகங்களால், உதிரி உதிரியான கருவிகளால் கட்டி உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் அல்ல. இவை மனிதர்களாலான எந்திரங்கள்.

வன்மமும் பொறுப்புணர்வின்மையும் கொண்ட மனிதர்களால் ஆன மனித இயந்திரங்கள் தனிமனித மனநிலையைப் பற்றிச் சிந்திக்க மறுக்கவே நினைக்கக்கூடும். .அரசியல் லாபத்தைக் கைக்கொண்டு தங்கள் சொந்த லாபங்களைப் பெருக்கும் மனிதர்களால் கட்டியமைக்கப்பட்ட மனித எந்திரங்கள் கூட்டு நனவிலி என்றொரு கருத்தாக்கத்தை முன்வைக்கும். தனிமனித மனம் சட்டத்தை - தனிமனித வாழ்வுரிமையை நினைக்கும். கூட்டுநனைவிலி கொலைக்குப் பதிலாக முன்வைக்கப்படும் கொலையைக்கூடக் கொண்டாடும்..

கூட்டத்தின் பெயரால் முடிவுகளை எடுக்கும் மனித இயந்திரங்களிடம் கருணையும் இரக்கமும் வெளிப்படும் என எதிர்பார்ப்பது இன்னொரு வகையான முரண்.

No automatic alt text available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை