: 75

கலாப்ரியாவின் தனுக்கோடி:

கடந்த காலத்தை - கடந்த காலத்து மனிதர்களை - அவர்களின் நம்பிக்கைகளை - நிகழ்காலத்துக்கு இழுத்துவந்து இணைக்கும்போது நவீன சிறுகதை உருவாகிவிடும். அந்த இணைப்பு நிகழாமல் போகும் நிலையில் அக்கதை அமானுஷ்யத்தை முன்வைத்த தொல்கதையாக நின்றுபோகும் வாய்ப்பே அதிகம். கவி. கலாப்ரியா ஆனந்தவிகடனில் எழுதியுள்ள ”தனுக்கோடி”யை
நவீன கதையெனச் சொல்வதற்குத் தயக்கமாகவே இருக்கிறது. 

தங்கள் வாழ்க்கையில் இயல்பாக நடக்கும் தற்செயல் விநோதங்களுக்குக் காரணம் தெரியாத சாதாரண மனிதர்கள் அதன் பின்னணியில் யாரோ இருப்பதாக நம்புவது சமயநம்பிக்கைகளின் மூன்றாவது பரிமாணம்.  அதனைச் சொல்லும் கதைகள் மந்திரவாதிகள், பூசாரிகள், கோடாங்கிகள், குறிசொல்லிகள் போன்ற அமானுஷ்ய மனிதர்களின் பிறழ்நிலையைப் புனைவாக மாற்றுவதில் தீவிரம் காட்டுவார்கள். அத்தகைய மனிதர்கள் சாதாரணமனிதர்களிடம் ஏற்படுத்துவது அச்சம். அச்சத்தின் விளிம்புக்குப் போகிறவர்களுக்குச் சிலநேரங்களில் நல்லதும் கெட்டதும் நடப்பதாக நம்புவார்கள். 
தனுக்கோடியின் வருகையும் வாக்கும் உண்டாக்கும் அமானுஷ்யத்திற்குப் பின் அவளின் பூப்படையாத உடலின் ரகசியங்கள் இருந்தன என்பதை எழுதிக்காட்டி, ஒரு பெருமழை நாளின் வீர்யத்தில் அவளது உடல் பூப்படைந்தது; அமானுஷ்யமும் தொலைந்தது என எழுதிக்காட்டியுள்ளார் கலாப்ரியா.
கதைக்கான களமும் முன்வைக்கும் தனுக்கோடியும் மலையும் மலைசார்ந்த குறிஞ்சிநிலத்துக்காரியாக இருப்பது அவரது கவிதைகளில் காணப்படும் திணையடையாளத்தின் நீட்சி. புனைகதைகளிலும் தொடருங்கள் கவியே!
Image may contain: one or more people


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை