: 57

காண்டாமிருகமாக்கப்படும் யானை

காண்டாமிருகமாக்கப்படும் யானை
===================================ஊடகங்கள் - எல்லாவகை ஊடகங்களும் அந்த யானையின் உருவத்தைக் காட்டிவிட்டன. தன்னை அறிந்துகொள்ளாத வெகுளித்தனத்தின் பெயராக முன்வைக்கப்பட்ட ஒரு சினிமாவின் பெயரை - சின்னத்தம்பி - யார்? ஏன் சூட்டினார்கள் என்ற வினாக்களுக்கு யாரும் விடை சொல்லப் போவதில்லை. நிரந்தரமான வாழிடத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தூரப்படுத்தப்பட்டதை ஏற்க மறுத்துத் திரும்பிவிடும் தவிப்பில் நடந்துநடந்து கடந்த தூரத்தைக் கணக்கிடுகிறோம்.

இந்த பூமிப்பரப்பும் அதன் இயற்கைவளங்களும் நீர்நிலைகளும் வானமும் காற்றும் என அனைத்தும் எனக்கானது என நினைக்கும் தனிமனித மனம், சில நேரங்களில் தன்னை உள்ளடக்கிய மனிதக் கூட்டத்திற்கானது என மட்டும் நினைக்கிறது. எல்லா உயிர்களிலும் இறைவன் இருப்பதாக நம்பும் மனிதர்கள்கூட அந்தக் கணத்தைத் தாண்டி மனிதர்களைப் பற்றியே நினைத்துக் கொள்கிறார்கள். மனிதர்கள் என்ற பன்மைக்குள் தன்பெண்டு, தன்பிள்ளை, தன்.. தன்.. தன்..

தன் போக்கில் இருந்த ஒரு யானையைத் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளால் அயனெஸ்கோவின் காண்டாமிருகமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காண்டாமிருகம் அதிகாரத்தின் குறியீடு. அசைந்து அசைந்

Image may contain: outdoor and nature

து வந்து மிதித்துத் துவம்சிக்கும் காண்டாமிருகம். குடும்பவெளிக்குள்ளும் கொண்டாட்ட வெளிகளுக்குள்ளும் வந்து நின்றாடும் அந்தகாரம்.

இந்த யானையை அதிகாரம் காண்டாமிருகமாக்க, பொதுமனமோ "மியாவ் மியாவ் மியாவ்: எனக் குரல் எழுப்பித் தவிக்கும் பூனை என்கிறது. அதன் பிளிறலை 'மியா'வாக்கி இரக்கத்தைக் கையளிக்கும் பொதுமனம், அதிகாரத்தை எதிர்க்கும் விளையாட்டு.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை