: 12

இரா.பிரபாகரின் சினிமா ஓர் அறிமுகம்: அடிப்படைப் பாடநூல்


பள்ளிக்கல்வியில் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணார்க்கர்களின் விருப்பம் இன்னும் இருக்கிறது. அதனால் அடிப்படை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மொழிமாற்றம் தேவைப்படுகிறது. ஆனால் பட்டப்படிப்பு, உயர்பட்டப்படிப்பு, ஆய்வுப்படிப்புகளில் தேவை உணரப்படவில்லை. ஆங்கிலவழி என நுழைந்து தமிழும் ஆங்கிலமும் கலந்து தேர்வுகள் எழுதி வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வகையான அறிதலும் வெளிப்பாடும் இரண்டாங்கெட்டான் தன்மையிலானது. பாடங்களிலும் தெளிவில்லாமல், கற்ற மொழிவழியான வெளிப்பாட்டிலும் புலமையில்லாமல் போய்விடும். கடந்த அரைநூற்றாண்டுக் கல்வியில் இதுதான் நடந்தது.

தமிழால் எல்லாம் முடியும் என்ற சத்தம் தோன்றி ஒரு நூற்றாண்டைத் தாண்டிவிட்டது. இந்தச் சத்தம் வெறும் சத்தம்தான்.அடிப்படை அறிவியல் துறைகளின் பாடங்களைத் தமிழில் கற்பிக்கப்பாட நூல்கள் தமிழில் இல்லை.அண்மையில் நடந்த பாடத்திட்ட மாற்றங்களில் முதலில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பாடங்களைப் பின்னர் தமிழுக்கு மொழிமாற்றம் செய்தார்கள். அவ்வாறான மொழிமாற்றப் புத்தகங்கள் மாணவர்களுக்கு உண்டாக்கும் நெருடல்கள் குறித்துப் பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதற்குப் பதிலாக நேரடியாகத் தமிழில் எழுதித் தரும் ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் இல்லை.

நண்பர் இரா.பிரபாகர் எழுதியுள்ள “சினிமா ஓர் அறிமுகம் “ என்னும் நூல் திரைப்படக்கலையின் அடிப்படைகளையும் தொழில் நுட்பப் பகுதிகளையும் விரிவாக முன்வைத்துள்ளது. சினிமாவைப் பாடமாக்க விரும்பும் ஒரு கல்வி நிறுவனம் தயங்காமல் இதனை மட்டுமே பாடநூலாக்கலாம். பார்வை நூல்களுக்குத் தமிழில் ஏராளமான நூல்கள் கிடைக்கின்றன.

இப்போது வெளிவர உள்ள 12 ஆம் வகுப்புச் சிறப்புத் தமிழ்ப் பாடப்
புத்தகத்தில் 6 அலகுகளில் ஒரு அலகாகச் சினிமாவைச் சேர்த்துள்ளோம். ஆசிரியர் குழு எனது ஒருங்கிணைப்பில் அப்பாடங்களை எழுதியது. இந்த நூல் முன்பே வந்திருந்தால் அதன் முன்பகுதியான அடிப்படைகளை அப்படியே சேர்த்திருக்கலாம். இப்போது இந்த நூல் சினிமாவைப் பட்டப்படிப்பில் தனியொரு தாளாக வைக்கலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது. இதுபோன்ற அடிப்படை நூல்கள் நிகழ்த்துக்கலைகளுக்கும் நுண்கலைகளுக்கும் எழுதப்படவேண்டும். இன்னும் சொல்வதானால் இயல், இசை, நாடகம் என்ற மூன்றுக்குமே எழுதப்பட வேண்டும்.

No photo description available.
No photo description available.


முகப்பு பக்கத்திற்கு செல்லவும் →இந்த இடுகையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

நான்

டாக்டர் அ. ராமசாமி


பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
இலக்கிய விமர்சனம், நவீன தமிழ் இலக்கியம், ஊடகம் மற்றும் பண்பாட்டுருவாக்கங்கள்


என்னுடைய புத்தகங்கள்


பிரிவுகள்


Flag Counter

மொத்த பார்வையாளர்கள்
webs counters

உங்கள் கருத்துகளை கீழே கொடுக்கவும்

காட்ட கருத்துகள் இல்லை